
நாம் இருக்கும் இந்த அண்ட வெளியில் மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள், சூரியன் இருக்கின்றது. அவைகளில் சில அதன் ஆயுள் காலம் முடிந்து கருகியோ அல்லது அணைந்து ஒரு கட்டத்தில் வெடித்து சிதறுகிறது. அப்படி வெடித்து சிதறிய ஒரு சூரியனை விஞ்ஞானிகள் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த வெடிப்பானது அண்ட வெளியில் நடக்கும் மிகப் பிரம்மாண்டமான வெடிப்பாக இருக்கும்.
ஒரு சூரியன் பல மில்லியன் ஆண்டுகள் வரை எரிய வல்லது. இதன் காரணத்தால் அணையும் சூரியனைப் பார்ப்பது என்பது எளிதான விஷயமில்லை.
ஆனால் பூமியில் இருந்து, பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள ஒரு அணைந்து போன சூரியன் வெடித்துள்ளதை, விஞ்ஞானிகள் சமீப காலமாக வீடியோவாக எடுத்துள்ளார்கள். அதனை கீழே வீடியோவாக இணைத்துள்ளோம்.
நமது சூரியனும் ஒரு நாள் எரிந்து முடிந்து வெடித்து சிதறும். வெடிக்கும் போது கருவளையமாக மாறி அருகில் உள்ள பல கிரகங்களை உள்ளே இழுத்து விடும். அந்த இடைவெளிக்குள் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இந்த சிறிய இடைவெளியில் தான், இனவெறி, மொழி, ஜாதி, ஏமாற்று வேலை, போர் என்று அனைத்தும் நடக்கிறது. இதனை நன்றாக உணர்ந்தவர்கள் ஞானியாக எப்பொழுதும் அமைதியாக இருப்பார்கள். ஏனில் வாழ்க்கை என்பது மிக மிக குறைந்த காலம். வாழும் போதே அதனை அனுபவிக்க வேண்டும்.
சூரியனின் இறுதிக்காலம் எப்படி இருக்கக்கூடும் என்பதை விஞ்ஞானிகள் முன்னரே கணித்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் முன்பு இருந்ததை விடவும் தற்பொழுது தெளிவான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இப்போது சூரியனுக்கு 4.5 பில்லியன் வயதாகிறது, நடுத்தர வயதை அடைந்திருக்கும் சூரியன் இன்னும் பத்து பில்லியன் வருடங்களில் அதன் இறுதிக்காலத்தை நெருங்கி விடும். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன்தான் அதை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அதுதான் உயர் வெப்பநிலையில் ஹீலியமாக மாறி ஆற்றலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.