
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள நவுபாடா பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் ஹசீனா மேமன், சுனில்குமார் உத்தமச்சந்த் ஜெயின் மற்றும் ஸ்வீட்டி ஆகிய மூவரும் சேர்ந்து பல சினிமா துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
அதனடிப்படையில் போலீசார் ரகசியமாக அந்த மும்பிராவில் உள்ள அம்ருத் நகரைச் சேர்ந்த அந்த கூட்டத்தின் தலைவியை கண்காணித்தனர். அப்போது அந்த கூட்டம் விபச்சாரம் செய்வது உறுதியானது.
அதனால் புதன்கிழமை அவர்கள் ரகசியமாக ஒருவரை வாடிக்கையாளர் போல செட்டப் செய்து அந்த பிளாட்டிற்கு அனுப்பினார்கள். அப்போது அந்த விபச்சார கும்பல் அவரோடு பெண்கள் பற்றியும் ரேட் பற்றியும் உரையாடினார்கள். அப்போது அங்கு ஒளிந்திருத போலீசார் அந்த கூட்டத்தினை கைது செய்தனர் .
பின்னர் அந்த வீட்டிலிருந்த தென்னிந்திய நடிகைகளை கைது செய்தனர். அந்த நடிகைகள் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்திருந்தனர்.
பிறகு போலீசார் அந்த பெண்களையும் அங்கு விபச்சாரம் செய்து வந்த தரகர்களையும் கைது செய்தார்கள். பிறகு அந்த குற்றவாளிகள் ஹசீனா மேமன், விஷால் அல்லது சுனில்குமார் உத்தமச்சந்த் ஜெயின் மற்றும் ஸ்வீட்டி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்
பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூ .2,14,015 ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .