வியாழனின் நிலவு: வெளியிட்ட நாசா! வைரல்!

உலகம் சற்றுமுன்
moon
moon

வானியல் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுப்பட்டிருக்கும் நாசா வியாழனின் மிகப்பெரிய நிலவை படம்பிடித்துள்ளது வைரலாகியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல விண்கலங்கள் மற்றும் தொலைநோக்கி போன்றவற்றை விண்ணுக்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை ஆய்வு செய்யும் ஜூனோ மிஷனின் ஒரு பகுதியாக வியாழனின் மிகப்பெரிய நிலவான கேனிமெட் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

nasa
nasa

வியாழனை இதுவரை 79 நிலவுகள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 53 நிலவுகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன. 26 நிலவுகளுக்கு பெயர் சூட்டுவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில் வியாழனின் நிலவுகளிலேயே மிகப்பெரிய நிலவான கேனிமெட்-ஐ 20 ஆண்டுகளுக்கு பிறகு மிக மிக நெருக்கமாக படம்பிடித்துள்ளது நாசா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.