காதலியை அடைத்து வைத்து சித்திரவதை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
woman - 2026

2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்து வீட்டு வன்முறை வழக்குகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர்..

அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் கொச்சியில் அரங்கேறி உள்ளது.. இதில் ஒரு பெண் தனது காதலரால் பல கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார். கேரள மாநில கண்ணூரில் மார்ட்டின் ஜோசப் (33), பங்கு வர்த்தகராக உள்ளார்.

இவர் கடந்த ஆண்டு லாக்டவுன் போடப்பட்டது முதல் 27 வயதான பெண் ஒருவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் வன்முறை காரணமாக அந்த பெண் மீண்டும் தனது வீட்டிற்கே சென்று விட்டார்.

ஆனால் அந்த பெண் திரும்பி வராவிட்டால் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் கசியவிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் மீண்டும் வந்தார்.. ஆனால் அந்த பெண்ணை மீண்டும் அடித்து துன்புறுத்தியதுடன், சிறுநீரை குடிக்க வைத்து வற்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார்.

தனக்கு நடந்த கொடூரத்தை விவரித்த அவர் ” என்னை படுக்கையில் கட்டிவைத்து துடைப்பம், மற்றும் பெல்ட்டால் அடித்தார். அவர் தொடர்ந்து அதே பகுதிகளில் என்னை அடிப்பார். சிறுநீர், கழிப்பறையிலிருந்து தண்ணீரையும் குடிக்க வைத்தார். என்னை தூங்கவிடாமல் தடுக்க, என் காயங்களின் மேல் சூடான நீரை ஊற்றுவார். அவர் என் கண்களில் மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளிப்பார்” என்று தெரிவித்தார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இதனையடுத்து ஒருவழியாக அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி விட்டார். நேராக காவல் நிலையத்திற்கு சென்ற அவர், தன்னை ஜோசப் பின்தொடர்ந்தார் என்று பயந்து, அப்போது அவர் புகார் கொடுக்கவில்லை, ஆனால் ஒரு மாதம் கழித்து ஜோசப் மீது அவர் காவல்துறையில் புகாரளித்தார்.

ஏப்ரல் 8 ம் தேதி கொச்சி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், பிப்ரவரி 15 முதல் மார்ச் 8 வரை மார்ட்டினால் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறினார், அந்த சமயத்தில் அவர் தன்னை சித்திரவதை செய்ததாகவும். அந்த புகாரின் அடிப்படையில், ஜோசப் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனினும் இந்த புகார் அளித்தும் ஒரு மாதழித்து, இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளியை கைது செய்ய ஒரு தனிப்ப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த நபரை கைது செய்வார்கள் என்றும் கொச்சி காவல்துறை கமிஷ்னர் நாகராஜு தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.