
காணாமல் போனதாக தேடப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி குவாஜா ஷாஹித் சடலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆத்முகம் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. அவர் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். மேலும் ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதியின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, அதிர்ச்சியில் மற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி க்வாஜா ஷாஹீத் அலியாஸ் மியான் முஜாஹித்தின் தலை துண்டிக்கப்பட்ட உடல் மட்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பாக். ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் அத்முக்காம் பகுதியில் கிடந்தது.
அத்துடன் வேறு ஒரு அடையாளம் தெரி யாத நபரின் உடலும் கிடந்தது. இரண்டு பிணங்களும் பாக். ராணுவ முகாமில் தற்போது உள்ளது.
2018 இல் நமது சுஞ்சுவன் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதின் முக்கிய நபர் க்வாஜா ஷாஹீத் அலியாஸ் மியான் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது.