டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 16 ஜூன் முதல் 17 ஜூன் வரை
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
அட்டவணை
(லீக் சுற்று ஆட்டங்களின் முடிவு வரை)
குரூப் A | குரூப் B | குரூப் C | குரூப் D |
இந்தியா – 7 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 5 பாகிஸ்தான் 4 கனடா – 3 அயர்லாந்து 1
| ஆஸ்திரேலியா 8 இங்கிலாந்து 5 ஸ்காட்லாந்து 5 நமீபியா 2 ஓமன் 0
| மேற்கு இந்தியத் தீவுகள் 8 ஆப்கானிஸ்தான் 6 நியூசிலாந்து 4 உகாண்டா 2 பாபுவா நியூகினியா 0
| தென் ஆப்பிரிக்கா 8 வங்கதேசம் 6 இலங்கை 3 நெதர்லாந்து 2 நேபாளம் 1 |
லீக் சுற்றின் கடைசி ஐந்து ஆட்டங்கள் 16ஆம் தேதியும் 17ஆம் தேதியும் நடந்தன. 16.06.2024 அன்று லாடர்ஹில் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் அயர்லாந்து (106/9) பாகிஸ்தான் (18.5 ஓவரில் 111/7) அணிகள் விளையாடின. அதில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 107 ரன் என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி சற்று திணறியது என்றுதான் சொல்ல வேண்டும்.
பாபர் ஆசம் மற்றும் ஷாஹின் ஷா அஃப்ரிடி இருவரின் முயற்சியால் அந்த அணி 18.5 ஓவரில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 111 ரன் அடித்து ஆறுதல் வெற்றிபெற்றது.
அதே நாளில் கிங்க்ஸ்டனில் வங்கதேசம் (106) நேபாளம் (19.2 ஓவரில் 85) அணிகளுக்கிடையில் நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, சூப்பர் 8இல் தனது இடத்தை உறுதிசெய்தது.
அன்றைய தினத்தின் மூன்றாவது ஆட்டம் கிரோஸ் ஐலட்ஸ் மைதானத்தில் இலங்கை (201/6) நெதர்லாந்து (16.4 ஓவரில் 118) அணிகளுக்கிடையே நடந்தது அதில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
17.06.2024 அன்று இரண்டு ஆட்டங்கள் நடபெற்றன. முதல் ஆட்டம் தரௌபாவில் பாப்புவா நியுகினியா (78) நியூசிலாந்து (12.2 ஓவரில் 79/3) அணிகளுக்கிடையே நடந்தது அதில் நியூசிலாந்து அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அதே நாள் கிரோஸ் ஐலட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் (218/5) ஆஃப்கானிஸதான் (16.2 ஓவரில் 114) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சூப்பர் 8
குரூப் 1 | குரூப் 2 | |
A | இந்தியா | அமெரிக்கா |
B | ஆஸ்திரேலியா | இங்கிலாந்து |
C | ஆஃப்கானிஸ்தான் | மேற்கு இந்தியத் தீவுகள் |
D | வங்கதேசம் | தென் ஆப்பிரிக்கா |
சூப்பர் 8 ஆட்டங்கள் இன்று 19 ஜூன் முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. 20 ஜூன் 2024 அன்று இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடுகின்ற ஆட்டமும் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் ஆட்டமும் நடைபெறுகின்றன. அதன் பின்னர் பின்வரும் ஆட்டங்கள் நடபெறுகின்றன.
இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா – 21.06.2024
அமெரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகள் – 21.06.2024
இந்தியா – வங்கதேசம் – 22.06.2024
ஆஃப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா- 22.06.2024
அமெரிக்கா – இங்கிலாந்து – 23.06.2024
மேற்கு இந்தியத் தீவுகள் – தென் ஆப்பிரிக்கா – 23.06.2024
இந்தியா – ஆஸ்திரேலியா – 24.06.2026
ஆஃப்கானிஸ்தான்– வங்கதேசம் – 24.06.2024