திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் பழமைவாய்ந்த 16 கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் உள்ளது இங்குள்ள நரசிம்மரை சேவிக்க இலங்கை வடக்கு மாகாண சபை வருகிறார்
இலங்கை வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சரான விக்னேஸ்வரன் நாளை குற்றாலத்தில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகிறார் ,அதை தொடர்ந்து கீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் சன்னதிக்கு வருகை புரிகிறார் இவர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ,இலங்கை முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

16 கரங்கள் கொண்ட நரசிம்மரை தரிசிக்க வருகிறார் இலங்கை முதல்வர்
Popular Categories



