ஏரியில் விழுந்த வளர்ப்பு நாயை காப்பாற்ற பிரேசில் ஜனாதிபதியின் மனைவி மார்சலா டேமர் லெப்டாப் தானே ஏரியில் குதித்துள்ளார்.
அதிபர் மாளிகையில் உள்ள ஏரியில், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது பொது மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதையறிந்த பொதுமக்கள் ஜனாதிபதியின் மனைவியின் செயலை சமூக இணையதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.