இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



