துபை: விமானம் வெடிக்கப் போகிறது என்று பயணி ஒருவர் கூறியதால், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த ஏர் அரேபியா நிறுவன விமானம் குவைத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏர் அரேபியா நிறுவனத்தின் ஜீ-9128 விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், திடீரென விமானம் வெடிக்கப் போவதாகக் கத்தினார். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவின் மத்தியக் கிழக்குப்பகுதியில் அமைந்த அல் மிஹாத் ராணுவத் தளத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்த அல் மிஹாத் விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் “விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, உயர் அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளனர்.
விமானம் வெடிக்கும் எனக் கூறிய பயணியால் பரபரப்பு: ஏர் அரேபியா அவசரத் தரையிறக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari