மறுவாழ்வு மையத்தில் மரணமடைந்த… ராயல் பெங்கால் டைகர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
royal bengal tiger - 2026

மறுவாழ்வு மையத்தில், ராயல் பெங்கால் டைகர் மரணமடைந்தது.

விசாகப் பட்டினத்தில் உள்ள விலங்கு மறுவாழ்வு மையத்தில் ராயல் பெங்கால் டைகர் சீதா மரணமடைந்தது.

சர்க்கஸ்களில் புலிகளை பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் 2004இல் சாம்ராட் சர்க்கஸில் இருந்து சீதாவை ராஞ்சி பிபிஎம் ஜூ பார்க்கிற்கு அனுப்பினார்கள்.

2006 ஆம் ஆண்டு வரை அங்கு இருந்த சீதாவை அதன்பின் விசாகப்பட்டினம் விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு மாற்றினார்கள். தற்போது புலி சீதாவின் வயது 27. இந்நிலையில், புலி சீதா மரணமடைந்ததாக விசாகா விலங்கு மறுவாழ்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.