
பிரபல நடிகர் திலிப் ஜோஷியின் மகள் நியாதிக்கு நடந்த திருமணம், சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான பதிவாக உள்ளது. மணமகள் நியாதி குஜராத் பாரம்பரியப்படி மணமகன் யசோவர்தனை கரம்பிடித்தார்.
பொதுவாக திருமணங்களின்போது மணமகள் பிரத்யேக மேக்அப்புடன் பங்கற்பதைத்தான் பார்க்க முடியும். ஆனால் ஒரு நடிகரின் மகளாக இருந்தும் கூட, இளநரையுடன் மணமகள் நியாதி திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த எளிமையை நெட்டிசன்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.
உணவு, வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் இளநரை என்பது தற்போது பதின்ம வயதினரிடையே அதிகரித்து வருகிறது.
இருப்பினும், எந்த வித அலகாரமும் இன்றி, இயல்பாக திருமணத்தில் பங்கேற்ற நியாதி, ‘எந்த நேரத்திலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ என்ற மெசேஜை உலகிற்கு சொல்லியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் கூறுகையில், ‘நியாதி, நீங்கள் உங்கள் இளநரையை மறைக்காமல் இருந்ததற்கு நன்றி. உங்கள் திருமண புகைப்படங்கள் அழகாக உள்ளன’ என்று கூறியுள்ளார்

இன்னொரு யூசர், ‘மணமகள் மன உறுதியோடு தலைக்கு வர்ணம் பூசாமல் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். அவரது தைரியம் பாராட்டத்தக்கது’ என்று கூறியுள்ளார்.
நடிகர் திலிப் ஜோஷி தனது மகள் நியாதியின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவை லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
மகளின் திருமணம் குறித்த திலிப் ஜோஷி தனது இன்ஸ்டா பதிவில், ‘இந்த அற்புதமான பயணத்தில் எனது மகள் நியாதி மற்றும் எனது குடும்பத்தில் புதிதாக இணையும் எனது மருமகன் யஷோவர்தன் ஆகியோர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்!
எங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. திருமண தம்பதியருக்கு நல்வாழ்த்துக்கள்.’ என்று கூறியுள்ளார்.