பொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் புகார் பெட்டி

Athar 4 - 2026

“ஆதார் அட்டைக்கு உடனடி கடன் ” ஊரை ஏமாற்றி வந்த மோசடிப்பெண் !!
.
சென்னையில் பொதுமக்களிடம் உடனடி கடன் தருவதாக ஆசைகாட்டி 7 லட்சத்திற்கு மோசடி செய்த மீனா என்பவர் போலீசார் கைது செய்தனா்.

சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த பரத்குமார் என்பவரின் மனைவி மீனா.

இவர் சங்கர் என்பவரை வேலைக்கு அமர்த்தி உடனடியாக கடன் தேவையா ? தொடர்புகொள்ளுங்கள்.. என துண்டு பிரசுரங்களை கொடுத்து பொதுமக்களிடம் விளம்பரம் செய்துள்ளார்.

இதை பார்த்து கடன் கேட்டுவந்தவர்களிடம் ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றின் நகல்களை வாங்கிக்கொண்டு போலியான வங்கிக்கடன் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்துள்ளார்.

FARAD 1 - 2026

பல வெற்று விண்ணப்பங்களிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அதன் பின் கடனுக்கு கமிஷன் என கூறி பல லட்சம் ரூபாய்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார் மீனா.

மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆதார்கார்டு, பான்கார்டு நகல்களை கொண்டு பூர்விகா மொபைல்ஸ், சங்கீதா மொபைல்ஸ், இன்னும் சில வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளில் சுமார் 7 லட்சம் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி குவித்துள்ளார்.

பொருட்களின் கடன் தொகையை செலுத்தாததால், கடன் தொகையை செலுத்த வேண்டி நோட்டிஸ் ஒன்று கடன் கேட்டு மீனாவிற்கு விண்ணப்பம் அளித்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளது.

complaint 2 - 2026

இது தொடர்பாக மீனாவிடம் அந்த நபர் கூறிய போது, அதற்கு மீனா உடனடியாக வீட்டை காலி செய்து விட்டு வேறு எங்கையாவது போய்விடுங்கள் உங்களை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என கூறி சமாளித்துள்ளார் .

3 குடும்பங்கள் தங்கள் வீடுகளை காலை செய்து நாடோடிகளை போல திரியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டதால், தங்களை இந்தநிலைக்கு தள்ளிய மீனாவை குறித்து துணைக்காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் காவல் துறையினர் மோசடி பெண்மணி மீனாவையும், அவருக்கு உதவியாக இருந்த சங்கர் என்பவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்ட மீனா ,சில தினங்களுக்கு முன் போலீஸ் உதவியுடன் தனது வீடுபுகுந்து தன்னை தாக்கினார்கள் என கூறி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தார்

ARASED - 2026

.அங்கு வைத்து தன்னை தாக்கியது கந்து வட்டி காரர்கள் என போலீசிடம் பொய் புகார் அளித்துள்ளார்.

இந்த பெண் மீனா ஏராளமானவர்களிடம் விதவிதமாக ஏமாற்றி பணத்தை கறந்துள்ளார்,

மேலும் பல வீட்டுஉபயோக பொருட்களையும் கடன் பெற்று மோசடி செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்த காவலர்கள் மருத்துவ மனையில் இருந்த மீனாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்

பொதுமக்கள் இது போன்ற நபர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் தங்களது தனிப்பட்ட ஆவணங்களை கொடுக்கும் யோசித்து செயல்பட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.