கோவையில் கள்ள நோட்டு தயாரிப்பு: 3 பேர் கைது!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
fakecurrency coimbatore - 2026

கோவையில் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மணியக்காரன் பாளையம் பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்தனர். அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து போலீஸார் சோதனை இட்டதில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அவர்கள் வசம் இருந்தன.

இதையடுத்து கிதர் முஹம்மது, மகேந்திரன் ஆகிய அவர்கள் இருவரிடமும் விசாரித்ததில் தடாகம் சாலையைச்சேர்ந்த சூரியகுமார் என்பவர் தயாரித்துக் கொடுத்ததாக அவர்களிருவரும் தெரிவித்தனர்.

இதனால் அவரது வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், லேமினேஷன் கருவிகளை கைப்பற்றி, அங்கிருந்த 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, சூரியகுமார், கிதர் முகமது, மகேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீஸார் அழைத்துச் என்றனர். அவர்களிடம் இதற்கு முன்பு இது போல் கள்ள நோட்டு தயாரித்து, புழக்கத்தில் விட்டுள்ளனரா? பின்னணியில் வேறு ஏதேனும் பெரிய கும்பல் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.