தூள் பக்கோடா
தேவையானவை:
பெரிய வெங்காயம் – கால் கிலோ (நறுக்கவும்),
கடலை மாவு – 150 கிராம்,
அரிசி மாவு – 25 கிராம்,
உருவிய கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
இஞ்சி – ஒரு துண்டு (நசுக்கவும்),
பச்சை மிளகாய் – 4 (நசுக்கவும்),
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 300 கிராம்.
செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி அதில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து மாவு கலவையில் சேர்த்து, நீர் தெளித்து பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரிக்கவும். விருப்பப்பட்டால்… 4, 5 பூண்டுப் பற்களை நசுக்கி சேர்க்கலாம்.