கொரோனா வந்திருக்குமோ?! பயத்தில் முதிய தம்பதி தற்கொலை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
dead bady 4
dead bady 4
  • ஹைதராபாதில் சோகம்.
  • கொரோனா பாதித்ததோ என்ற பயம்..
  • முதிய தம்பதிகள் தற்கொலை.

கடந்த சில நாட்களாக ஜுரத்தால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதிகள் தமக்குக் கொரோனா தாக்கி விட்டதோ என்று கவலை அடைந்தார்கள். தம்மால் குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் பரவும் என்ற பயத்தால் அந்த முதிய தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

ஹைதராபாதில் பஞ்சகுட்டா போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இந்த சோகம் நேர்ந்துள்ளது. கொரோ பயத்தால் முதிய தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். 10 நாட்களாக ஜுரத்தால் அவதிப்பட்டு வந்த தம்பதிகள் விஷம் கலந்த கூல்ட்ரிங்ஸ் குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

தமக்கு கோவிட் பரவி விட்டது என்று நினைத்துக் கொண்டு தம்மால் குடும்பத்தில் பிறருக்கும் வைரஸ் இன்ஃபெக்ஷன் பாதிக்குமோ என்ற பயத்தால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரிகிறது.

இறந்தவர்களை யாதம்மா வெங்கடேஸ்வர் நாயுடு (65) அவர் மனைவி வெங்கடலட்சுமி (60) என்று அடையாளம் கண்டார்கள். இவர்கள் ராஜ்பவன் அருகில் உள்ள எம்எஸ் முக்தாவில் உள்ள ராஜ்நகரில் வசித்து வருகிறார்கள்.

வெங்கடேஸ்வர் நாயுடு பாரெஸ்ட் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷனில் டிரைவராக பணிபுரிந்து ரிடையர் ஆனார். முதிய தம்பதிகள் இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட செய்தி தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றடைந்தார்கள்.

இறந்த சடலங்களை போஸ்ட் மார்டத்திற்காக உஸ்மானியா ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரணை தொடங்கினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.