90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
thiruma stalin - 2026

திமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான வகையிலும் கொச்சையாகவும் பேசியுள்ள திருமாவளவனின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், திமுக.,வில் உள்ள 90 சதவீதம் இந்துக்கள்  சுரணை அற்றவர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் களை கட்டியுள்ளன. 

திருமாவளவன் மீது பாஜக.,வின் அஸ்வத்தாமன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து தி.மு.க’வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை என்ற பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. 

அதில், “”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதை திரித்து – வன்முறையை தூண்டும் மதவெறியர்களை விடுத்து – @thirumaofficial மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது”  – கழக தலைவர் @mkstalin அறிக்கை” என்று போலீஸாரின் இந்த வழக்குப் பதிவு நடவடிக்கையை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டிவிட்டர் பதிவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள பேஸ்புக் லிங்க்கில், முழு அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், பெரியாரும் அண்ணாவும் கூறியதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் கருத்தைச் சுட்டிக் காட்டி, சமூகத்தில் அரை நூற்றாண்டுகளாக மதக் காழ்ப்புணர்வுடன், சமுதாயத்தைப் பிரித்து பிளவுபடுத்தி நாசமடையச் செய்துள்ள இந்தத் தலைவர்களின் கருத்துகள் முற்றிலும் களையப் பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. 

ஏற்கெனவே இந்து மத அவமதிப்பு, இந்து மத சடங்குகளை கொச்சைப்படுத்துதல், இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறாமல் புறக்கணிப்பது, இந்துக்களின் புனித சின்னமான விபூதி குங்குமத்தை  பொது வெளியில் யாராவது மரியாதை நிமித்தமாக வைத்தால் கூட அதனை அங்கேயே அழித்து மனதில் உள்ள இந்துக்களின் மீதான குரோதத்தை வெளிப்படுத்துவது என இந்து மத வெறுப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் முழு மூச்சாக செய்து வருகிறார். 

முன்னர் திருமாவளவன் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் இந்து மதத்தைக் கொச்சைப் படுத்திப் பேசிய நிகழ்விலும் கலந்து கொண்டு, தாம் இந்து மத விரோதியே என்பதை ஸ்டாலின் நிரூபித்தார். 

இந்த நிலையில் திருமாவளவனின் கொச்சையான பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.  தேர்தல் நெருங்குவதால் இது அரசியல் என்றும், தாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருந்த ஸ்டாலின், தற்போது, இந்து மத வெறுப்பு என்பதையே ஆயுதமாக்கி அரசியல் செய்து, திமுக.,வின் 90 சதவீத இந்துக்களும் சோற்றில் உப்பு போட்டு தின்னாத சுரணை கெட்டவர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் என்று கருத்துப் பதிவிடுகிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

இதனிடையே, ஸ்டாலினின் ஆதரவுக் கருத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன். அவர் தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கும் நன்றிக் கருத்து…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.