கொரோனா ஊசி போடறேன்.. மயக்க ஊசி போட்டு திருடிய உறவு பெண்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
injection - 2026

கொரோனா தடுப்பு ஊசி போடுவதாக கூறி மயக்க ஊசி போட்டு உறவினர் வீட்டில் பெண் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

49 வயதான ஆதிமூலம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள லாக்கூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பும் பொழுது, ஆதிமூலத்தின் உறவுக்கார பெண்ணான சத்யா என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது ஆதிமூலத்தின் மகன் கிருஷ்ணமூர்த்தி ஆட்டோ ஓட்டி வந்ததால் ஆட்டோவை நிறுத்தி, தானும் வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்கிவிட்டு காலை செல்வதாக ஆட்டோவில் ஏறியுள்ளார் சத்யா.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி சத்யாவை வீட்டில் தங்க அனுமதித்த போது தன்னிடம் தடுப்பூசி இருப்பதாகவும் அதை போட்டுக்கொண்டால் கொரோனா வராது எனவும் கூறியதை நம்பிய கிருஷ்ணமூர்ததி அவரது மனைவி மற்றும் மகள்கள் என வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஊசி போட்டுக் கொண்டனர். ஆனால் சத்யா கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி ஏமாற்றி மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் மயக்கம் அடைந்த பின்பு சத்யா அந்த வீட்டு பெண்கள் அணிந்திருந்த நகைகள் என மொத்தம் 19 சவரன் நகைகளை திருடி விட்டு இரவோடு இரவாக தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், மயக்கம் தெளிந்து காலையில் எழுந்த போது தாங்கள் போட்டிருந்த நகைகள் மட்டும் இல்லாமல் பீரோவில் இருந்த நகையும் இல்லாததால் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சத்யாவும் வீட்டில் இல்லாததால் அவர் தான் இந்த காரியத்தை செய்தது என்று உறுதி செய்து ராமநத்தம் போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்ததை அடுத்து சத்யாவை தேடி வந்த நிலையில் மங்களூர் பகுதியில் அவர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ராமந்ததம் போலீசார் சத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.