ஆரோக்கிய சமையல்: முள்ளங்கி அல்வா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
H
H

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1/4 கிலோ
சர்க்கரை – 250 கிராம்
நெய் – 3 table spoon
பன்னீர் Esence – 2 துளி
முந்திரி – 4
பாதாம் – 4

செய்முறை :

முதலில் 1/4 கிலோ இளசான முள்ளங்கியை நன்றாக கழுவி அதை துருவி கொள்ளுங்கள். ஒரு வாணலியில் 2 table spoon நெய்
சேர்த்து அதில் 4 முந்திரி 4 பாதாம் துருவி சேர்த்து வருத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அதே
வாணலியில் துருவிய முள்ளங்கியை போட்டு நன்றாக வதக்கவும்.

வதக்கும் போது அதுவே தண்ணீர் விடும், அதிலேயே நன்றாக வேகவைக்கவும். முல்லங்கி நன்றாக வதங்கியவுடன் அதில்
250 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதில் வருத்த முந்திரி பாதாமை சேர்த்து, 2 துளி பன்னீர் Esence
சேர்த்து நன்றாக கிலரி அடுப்பில் இருந்து எடுத்து சூடாக பரிமாரவும். சுவையான முள்ளங்கி அல்வா ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.