கலக்கல் சுவையில்… முள்ளங்கி உசிலி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Radish
Radish

தேவையான பொருட்கள்

துருவிய முள்ளங்கி. 3
தாளிக்க:-
1டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
1டீஸ்பூன்கடுகு
1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1காய்ந்த மிளகாய்
1 கொத்து கருவேப்பிலை
4பல் பூண்டு
4 சின்ன வெங்காயம்

உசிலி செய்வதற்கு:-
1/2கப் கடலை பருப்பு
2காய்ந்த மிளகாய்
1பச்சை மிளகாய்
1துண்டு இஞ்சி
1/4டீஸ்பூன் சோம்பு
தேவைக்கேற்ப உப்பு
பெருங்காயம் சிறிதளவு

செய்முறை
பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி,சோம்பு,தேவைக்கேற்ப உப்பு வைத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நான்கு பல் பூண்டு வெங்காயம் வதக்கி, பின்பு துருவிய முள்ளங்கியை சேர்த்து நன்கு வதக்கவும்.

தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி முள்ளங்கி வெந்தவுடன் ஆவியில் வேகவைத்த பருப்பை உதிரியாக பொடித்து,அதில் கலந்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறி எடுக்கவும்.முள்ளங்கி பருப்பு உசிலி ரெடி. இப்படி செய்வதினால், முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட விரும்பி உண்ணுவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.