இந்திய அஞ்சல் துறையில் பணி!

இந்தியா வேலைவாய்ப்பு
post office
post office

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் இருந்து Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman, Painter, Fitter, Copper & Tin Smith, Upholster காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு என மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்குமான வயது தளர்வுகள் உண்டு.

இந்த பணிக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவங்களின் வாயிலாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதனுடன் ஒரு வருடம் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதற்கான சான்றிதல் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.19,900 முதல் அதிகபட்சம் ரூ.63,200 வரை ஊதியமாக வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் 12.11.2021 அன்றுக்குள் கீழே அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

More Info: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21102021_CEPT.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.