patchoru - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பாச்சோறு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
patchoru - 2026

பாச்சோறு
தேவையான பொருட்கள்
பொடி அரிசி – 300கிராம்
தேங்காய் – 3
சீனி – 1 1/4 கிலோ
முந்திரி – 100 கிராம்
ஊற வைத்து பொடியாக நறுக்கவும்:
பிஸ்தா – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்
ஏலக்காய் (விதையை மட்டும் அரைக்கவும் )- 15
கிஸ்மிஸ்- 50 கிராம்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 2துளி

செய்முறை
அரிசியை சரி தண்ணீர் வைத்து 3/4 பாகம் வேக வைக்கவும்.
வெந்தவுடன் சீனி போட்டு கொதிக்கவைக்கவும்.
இதோடு துருவிய தேங்காய் போடவும். 10 நிமிடம் வேக விடவும்.
பிறகு பொடியாக அரிந்த முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் ஏலக்காய் தூள் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இறக்கிய பிறகு எஸ்ஸென்ஸ் சேர்த்து இறக்கவும். அரிசியை அதிகமாக வேக விடகூடாது.
கறுப்பில்லாமல் தேங்காயை துருவி வைக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.