அறந்தாங்கி அருகே சிலட்டூரில் அதிமுக பொதுகூட்டம்

அறந்தாங்கி

 

அறந்தாங்கி அருகே சிலட்டூரில் எம்ஜிஆர் 101 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடந்தது கூட்டத்திற்கு அவை தலைவர் திருஞாணம் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் அறந்தாங்கி வேலாயுதம் திருவரங்குளம் துரைதனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர ;சந்திரமோகன் வரவேற்றார்.

 

கூட்டத்தில் மாவட்டசெயலாளர் வைரமுத்து தலைமைகழக பேச்சாளர் ஆண்டிமுத்து சேகர் ஆகியோர் பேசினர்.அதனை தொடர்ந்து            நடந்த பொதுகூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

 

முன்னாள் எம்எல்ஏ அரசன்,ஞானகலைச்செல்வன்,ரெங்கையன்,பாலகிருஷ்ணன்,ஆத்மநாதன்,குமரேசன்,அப்பாவு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் 600 பேர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.