சத்து மாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி

உள்ளூர் செய்திகள்

சென்னை: சென்னையில், தாய் எடுத்துக் கொள்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழுகிணறு அப்பாசாமி சந்து பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மனைவி பாளையம். சந்தோஷ் இதே பகுதியில் காய்கறிக் கடை வைத்துள்ளார். இவர்களுக்கு ரித்திகா என்ற 4 வயது பெண் குழந்தையும், சஞ்சய் என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷ் மனைவி பாளையத்துக்கு குழந்தை பிறந்ததையொட்டி, அவர் எடுத்துக் கொள்ள சத்து மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டில் மாத்திரைகளை பாளையம் கீழே வைத்துவிட்டு சமையல் செய்ய உள்ளே சென்றுள்ளார். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரித்திகா அந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து வாயில் போட்டு விழுங்கியிருக்கிறாள். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள். இதைக் கண்டு பாளையம் பதறியடித்து உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரித்திகாவை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரித்திகா உயிரிழந்தாள். இதுகுறித்து, ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.