பெரியார் சிலை விவகாரம் குறித்து உதயநிதி கூறியது என்ன தெரியுமா?

சற்றுமுன் தமிழகம்

பெரியார் சிலை விவகாரம் குறித்து எச்.ராஜா கூறிய கருத்து கண்டனத்துக்கு உரியது என்றாலும் அதை அரசியல் தலைவர்கள் அணுகும் முறை நாகரீகமற்றதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

வைரமுத்து பிரச்சனையின்போது பாஜக நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்கிறது என்று குற்றஞ்சாட்டிய அதே தலைவர்கள் இன்று அதே முறையை கையில் எடுத்துள்ளதை மக்கள் அமைதியாக பார்த்து கொண்டு வருகின்றனர். மேலும் இவர்களில் ஒருசிலர் பெரியார் என்ற பெயரை தவிர அவரை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் கண்டனம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது வேடிக்கையிலும் வேடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் உதயநிதி தனது பங்குக்கு தனது டுவிட்டரில் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: செருப்பு தைப்பவன் மகனும் கலெக்டராக வேண்டுமென்று போராடிய தந்தைப் பெரியாரின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. அவர் மீது அன்று செருப்பு வீசியபோதும் அவர் சிலையாக உருவெடுத்தார். அப்போது வீசியவர்களை போல், இன்றைக்கும் மறைந்துகொண்டு Post போட்டுவிட்டு Delete செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.