
நவராத்ரி விழா:
மதுரை: மதுரை அருகே, கொடிமங்கலம் ஸ்ரீ சீதாலட்சுமி ஆலயத்தில், நடைபெற்ற சுவாஸினி &கன்யா பூஜை நடைபெற்றது.
நவராத்திரி முன்னிட்டு, இக்கோவிலில் தினசரி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்கள் காட்சியளிக்கிறார், நவராத்திரி விழா முன்னிட்டு, இக்கோயிலில் சுகாசினி மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதில் ,ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் .
இதே போல, நவராத்திரி முன்னிட்டு மதுரை மதுரை அருகே சோழவந்தான் சிவன் ஆலயத்தில், அம்பாள் தினசரி அலங்காரங்களில் பக்தர் காட்சியளித்தார்.
இதே போல, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திரௌபதி அம்மன் திருவேடகம் ஏடகநாதர், மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயம், மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம் , இம்மையில் நன்மை தருவார் ஆலயம், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், தென்கரை மூலநாதர் உள்ளிட்ட கோயில்களில் நவராத்ரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சிவகாசியில், ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மன்!
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையும், காசுகளால் கோர்க்கப்பட்ட மாலையும் அணிவிக்கப்பட்டு, தாமரை பீடத்தில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டல அபிஷேக விழா!
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக
விழா கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கான மண்டல அபிஷேக விழா நேற்று நடந்தது.
இதற்காக நடைபெற்ற யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து , மூன்று கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு
மண்டல அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் , அன்னதானம் வழங்கப்பட்டது. பொருசுப்பட்டி திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.