cm car inspect near tuticorin - 2026

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

நெல்லை Reporters Diary அரசியல் சற்றுமுன்
cm car inspect near tuticorin - 2026

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர் சோதனை சாவடி பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பயணித்த கார் சோதனை.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுரை–தூத்துக்குடி நெடுஞ்சாலையின் ஆவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பயணித்த கார் திடீரென நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, முதல்வரின் அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டதுடன், காரில் இருந்த சூட்கேஸ் மற்றும் பிற பொருட்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு உறுதி செய்யும் வகையில் எந்த வாகனமும் விலக்கு இல்லாமல் சோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.