பிரதமர் மோடி அலுவலக உதவி செக்ஷன் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்

சற்றுமுன்
 
பிரதமர் மோடி அலுவலகத்தில் உதவி செக்ஷன் அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த 12 இளநிலை ஊழியர்கள், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதே சமயத்தில், பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 3 பேரும், வேளாண்மை, தகவல் ஒலிபரப்பு ஆகிய அமைச்சகங்களுக்கு தலா 2 பேரும், வர்த்தகம், உணவு, உயர் கல்வி, பெட்ரோலியம், சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கு தலா ஒருவரும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் மாற்றத்துக்கான காரணம் கூறப்படவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.