செங்கோட்டை ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
senkottai anjaneyar temple1 - 2026

செங்கோட்டையில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா கடந்த 8 ம் தேதி காலை முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 2 ம் கால பூஜை நடந்தது.

senkottai anjaneyar temple2 - 2026

கும்பாபிஷேக நாளான இன்று காலை 6 மணிக்கு 3ஆம் மற்றும் 4ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, காலை 10 மணிக்கு பாலவிநாயகர், பாலசுப்பிரமணியர், ராமபக்த ஆஞ்சநேயர், வழிவிடும் பரமேஸ்வரி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.

இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் விழாக் கமிட்டியர் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.