நீர் நிலைகளைப் பாதுகாக்காவிட்டால்… பாட்டிலிலும் கேப்ஸ்யூலிலும்தான் தண்ணீரைப் பார்க்கமுடியும்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

29 July19 Chenni highcourt - 2026

நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால், எதிர்கால சந்ததியினர் தண்ணீரை கேப்சூலிலும் பாட்டிலிலும்தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படும் என்று கூறியுள்ளது உயர் நீதிமன்றம்.

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பம் ஏற்படுத்த கோரியும் மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கக் கோரியும் ஜிவிஆர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், நீர்நிலைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், அப்படி பாதுகாக்கவில்லை என்றால் எதிர்கால தலைமுறையினர் பாட்டில்களில்தான் நீரை பார்க்க நேரிடும் என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மக்கள் வரிப் பணத்தை இலவசங்களுக்கு செலவிடுவதை விட, அணைகள் கட்டுவதற்காக உபயோகிக்கலாம் என்று கூறிய நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என்று கூறியுள்ளது.

Thamirabarani River - 2026

நீர்வழித் தடங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், நீர்நிலைகளைப் பாதுகாக்க தலைமைச் செயலாளர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் தண்ணீரை பார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இலவசங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதில் வீணாகும் நீரை சேமிக்க அரசு அணைகளை கட்டலாம் என்றும் தெரிவித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.