முகூர்த்த நேரங்கள்: நாம் திருமணத்துக்கு, சாந்தி முகூர்த்தத்துக்கு குறிக்கும் நேரங்கள் பிள்ளை பெண் இருவருக்கும் ஒத்துவரவேண்டும்.
இப்படி பார்த்தால் தான் பிரிவு சோகம் மன அழுத்தம் போன்றவை இல்லாமல் சந்தோஷமாக புத்ர சௌபாக்யங்களுடன் இருப்பார்கள்.
இப்போதெல்லாம் சத்திரம் கிடைக்க வேண்டும் என்று நாள் பார்க்கிறார்கள் போலும். மேலும் நிச்சயதார்த்தம் போன்றவற்றுக்கும் சரியான முகூர்த்த நேரம் குறிக்க வேண்டும்.
சாந்தி முகூர்த்தம் நாள் நேரம் மிக நன்றாக இருவருக்கும் ஒத்துவரும்படியாக குரு சுக்ர அஸ்தமனம் இல்லாத நாளாக ராகு சம்பந்தப்படாத நேரம் ஓரை இப்படி பார்த்து செய்தால் தான் புத்திர பாக்கியம் நன்றாக இருக்கும். சந்திரனும் செவ்வாயும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
முகூர்த்தம் என்பது பாணிக்ரஹணம் எனப்படும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கைபிடித்து 7அடி எடுத்து வைத்தல் ஆகும் இதை சரியான முகூர்த்த நேரத்துக்குள் அமைத்து விட்டால் ஒருபோதும் விவாகரத்துகள் பிரிவுகள் மன கசப்புகள் இருக்காது.
லக்ஷ லக்ஷமாய் பணத்தை கொட்டி திருமணம் செய்கிறோம் நல்ல நேரத்தை சரியாக பார்க்க தவறிவிடுகிறோம். ராகு போன்ற பாப கிரஹ சம்பந்தம் இல்லாத முகூர்த்த நேரங்களை குறிப்பது தான் சிறந்தது.
- ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன் (ரவி சாரங்கன்)




