மேஷம் (செப்டம்பர் 16 – செப்டம்பர் 22)

மேஷ ராசி : அசுபதி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


மேஷ ராசியினருக்கு இந்த வாரம் உங்கள் வாழ்வின் முன்னேத்திற்கான வழிகள் பிறக்கும். தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சமயமாக இது இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சளைக்காமல் கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருக்கும். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். பெண்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் அகலும். அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய பணம் தேடி வரும். மாணவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புவதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வந்தால புது உற்சாகம் பிறக்கும்.