Homeஉரத்த சிந்தனைஆப்கன்... காட்சி மாற்றங்கள் ... உண்மை உருவில்!

ஆப்கன்… காட்சி மாற்றங்கள் … உண்மை உருவில்!

06 May 08 afgan
06 May 08 afgan

ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்டுவரும் ஆட்சி மாற்றம் உலக அரங்கில் பல காட்சி மாற்றங்களை உண்டாக்கி கொண்டு இருக்கிறது.

இன்று உள்ள நிலையில் உலகின் எந்த ஒரு நாட்டையும் அது விட்டு வைக்கவில்லை.

ஆனால் உலகின் மற்ற நாடுகளில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை சரியான விதத்தில் புரிந்து கொள்ள உதவும் அங்குள்ள ஊடகங்கள் போல்… இந்திய ஊடகங்கள் இங்கு உள்ள மக்களுக்கு ஆப்கன் விஷயங்களை சரியாக காட்சிப்படுத்துவதில்லை…. மாறாக பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிப்பு செய்கிறது…. அல்லது அப்படி ஒரு பாவ்லா பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

👉உதாரணமாக ஒன்று பாருங்கள்….
ஆஃப்கானிஸ்தானில் உள்ள தலைநகர் காபூலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களை தாலிபான்கள் என்றே இங்கு உள்ள ஊடகங்கள் செய்தி வாசிக்கின்றன…. ஆனால் நிஜத்தில் அவர்கள் தாலிபான் இயக்கம் அல்ல…. அவர்களை அக்கானி நெட்வொர்க் பிரிவினை சார்ந்தவர்கள். சிலர் இவர்களை வடக்கு கூட்டணி படையினரை ஆதரிப்பவர்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அதுவும் தவறு.

இந்த வடக்கு கூட்டணி படையினரை பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்பதாக மட்டுமே சரியாக புரிந்து கொண்டு இருப்பவர்கள் கூட அவர்கள் எவ்வாறு தாலிபான்களோடு வேறுபடுகிறார்கள் என்பது புரிந்துக் கொள்ள வில்லை….. அல்லது விளக்கமாக செய்தி வாசிப்பதில்லை.

இது புரியாததால் இந்தியா சர்வதேச அரங்கில் ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் இயக்கத்திற்கு எதிரான ஐநாவில் தலைமை பொறுப்பில் இருந்து, கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கும்….. ஆஃப்கானிஸ்தானில் தற்போது இன்று வெள்ளிக்கிழமை (செப் 3) அறிவிக்க பட இருக்கும் ஆட்சி மன்ற குழு தலைவர் மற்றும் முக்கிய நிர்வாக குழு உறுப்பினர்கள்… அமைச்சர்கள் ஆகியோர்களை தீர்மானிக்கும் முக்கிய கூட்டத்தில் இந்தியா தனது சார்பில் கத்தார் நாட்டின் வெளியுறவு துறை செயலர் மட்டத்தில் இருப்பவரை அனுப்பி கலந்து கொண்டதையும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது புரிந்து கொள்ள முடியாதது போல் காட்சிப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு இதனை பாகிஸ்தான் பாணியில் செய்தி வெளியிட்டு மானத்தை வேறு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது பாகிஸ்தான் சொல்கிறது…. இதுநாள் வரை இந்தியா எதிர்த்த தாலிபான்களை தற்சமயம் மறைமுகமாக ஆதரிக்கிறது…. அவர்கள் அமைக்கும் ஆட்சி மன்ற நிர்வாகிகளின் பட்டியலில் இந்திய விருப்பங்களை தாலிபான்கள் இயக்கம் நிறைவேற்றி கொடுக்கிறது என்கிற ரீதியில் செய்தி வாசிக்கிறது.

வெளியில் இருந்து மேலோட்டமாக பார்த்தால் அது அப்படி தான் தெரியும்…… ஆனால் பாகிஸ்தான் சொல்வது அதன் வயிற்றெரிச்சலை…. காரணம் 1996 களில் அமைந்த தாலிபான் அரசு போல் இல்லாமல்…. தற்போது உள்ள தாலிபான்கள் ஆட்சி முற்றிலும் வேறுபட்ட தளத்தில் அமைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்……உடனே இப்பதிவு அவர்களை அதாவது தாலிபான்களை….. நல்லவர்கள் என்று லாவணி பாடுவதாக எடுத்துக் கொண்டு விட கூடாது….. சமாச்சாரம் அதுவல்ல….

அவர்கள் அதாவது தாலிபான்கள் தற்சமயம் பாகிஸ்தானை சார்த்து இருக்க… இயங்க…. விரும்பவில்லை. அவர்களுக்கு இந்திய தயவு தேவையாக இருக்கிறது… இதற்கு காரணம் நம் மீது கொண்ட பற்று அல்ல… சீனா மீது கொண்ட பயம்.

ஏற்கனவே சீனா ஆஃப்கானிஸ்தானில் தங்கள் மூதாதையர்கள் ஆட்சி செய்த பூமி என்று கயிறு திரிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்…. இன்று உலக அளவில் அது தான் மிகப்பெரிய சமாச்சாரம்….. கிஞ்சிதமும் வெட்கமே இல்லாமல் அது ஆஃப்கானிஸ்தானை சொந்தம் கொண்டாட கிளம்பி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தங்கள் வம்ச அரசர்களின் கதைகளை ஆஃப்கானிஸ்தானில் அவர்கள் ஏற்படுத்தின மாற்றங்களை சிந்துபாத் கதைகளை மிஞ்சும் வகையில் வெளியிட்டு அதிரடித்து வருகிறார்கள்.

How to train your dragon on Afghanistan. தலைப்பு மாத்திரம் இல்லை மற்றதெல்லாம் வந்து விட்டது.

ஆச்சா……
இது ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க சீனா மெல்ல மெல்ல பாகிஸ்தானை கழட்டி விட்டு விட்டு ஆஃப்கானிஸ்தானில் கால் பதிக்க திட்ட மிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.

இது பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அவர்களால் இதனை பொறுத்து கொள்ள முடியவில்லை…. இதற்கு காரணம் இந்தியா என்று நினைக்கிறது. அதற்கும் காரணம் கில்கிட் பல்டிஸ்தான்.இது பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதி. இதனையும் சேர்த்தே இந்தியா தனது அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். இதனை நன்கு உணர்ந்த சீனா வேண்டாம்….. இந்த வம்பே வேண்டாம்…என ஒதுங்க நினைக்கிறது… பாகிஸ்தானில் அது செய்து இருக்கும் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு சமமாக குவாடர் துறைமுக பகுதிகளை தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர். படியளப்பதையும் நிறுத்தி வைத்து விட்டனர்.

அதாவது தற்போது தனது பட்டுப் பாதை திட்டங்களை ஆஃப்கானிஸ்தான் ஊடாக நிறைவேற்ற துடிக்கிறது சீனா.

இதற்கு பெரியதாக தாலிபான்கள் இயக்கத்தில் சலசலப்பு இல்லை இதில் உள்ள நகைமுரண். அதற்காக அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள கூடாது. அவர்களுக்கு பயங்கரமான பணத்தேவை இருக்கிறது….. சம்பளம் கொடுக்க வேண்டும்…. தளவாடங்கள் வாங்க வேண்டும்…. அரசு நிர்வாகம் செயல் பட நிறைய பணம் வேண்டும். முன்பு செய்தது போல கஞ்சா பயிர் எல்லாம் செய்ய முடியாது தற்போது…. ஆதலால் சீன பணத்தை முதலீடுகளாக பெற விரும்புகிறார்கள். கடனாக அல்ல….. இதற்காக இந்தியாவை துணைக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் இந்தியாவை சார்ந்த இருக்க விரும்பும் பிரதான விஷயம் இது தான்.

பொருளாதாரம்.

பாகிஸ்தான் பக்கம் போகாமல் இருப்பதற்கும் இதுவேதான் காரணம்.

இன்று உள்ள சூழ்நிலையில் ஆஃப்கானிஸ்தானை விட படு பிச்சைக்காரனான நாடாக பாகிஸ்தான் மாறியிருக்கிறது.

மிக மிக சிக்கலான நேரத்தில் மிகச் சரியான காய் நகர்த்தல் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது….. வெகு நிச்சயமாக இது தாலிபான்களால் செய்ய முடியாத சாகஸம் இது என்றால்……. பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள பூதக்கண்ணாடி வேண்டியதில்லை.

இது தான்…. இங்கு உள்ள பலரது கண்களை உறுத்த ஆரம்பித்து இருக்கிறது……

தனிப்பட்ட கட்சி செல்வாக்காக மாறிவிட கூடும் என்கிற அரசியல்வியாதி மனம் வேலை செய்கிறது…. நாட்டின் நலன் பின் நகர்த்தப்படுகிறது. இது அவர்களின் கை வந்த கலை அல்லவா….. விட்ட குறை தொட்ட குறை என்பது போல…..
காஷ்மீரில் உள்ள மதப்பிரிவிணை வாத சக்திகளை தாங்கிப் பிடிக்க… தூக்கி பிடிக்க….. துடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்…..

ஷரியத் சட்டம் என்கிறார்களே தவிர அதனை அமல் படுத்த தாலிபான்களே முன்வரவில்லை என்பதை தெரியப்படுத்தவில்லை… போதாக்குறைக்கு மெஹபூபா இங்கும் அதாவது காஷ்மீர் பகுதியிலும் தாலிபான்கள் கால் பதிக்க வேண்டும் என்று கருத்து சொல்லி இருப்பதாக செய்தி வெளியிட்டு கொண்டு இருக்கிறார்கள். தாலிபான்களால் வடக்கு கூட்டு படையினர் அரண் அமைத்து காவல் இருக்கும் பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியிலேயே இன்னமும் கால் வைக்க முடியவில்லை என்பதை சுலபமாக மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்.

என்ன இருந்தாலும் கை தேர்ந்த அரசியல்வியாதிகளின் கால் பிடிப்பதின் குணம் போய் விடுமா என்ன?????

  • Shri Ram

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
75FollowersFollow
74FollowersFollow
3,952FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...