
சென்னை நங்கநல்லூரில் ஹஸ் கமிட்டி இல்லம் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று திமுக., அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிவிப்புக்கு கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. வழக்கம் போல், எரிகிற பிரச்னைகளில் இருந்து திசை திருப்பி, மத மோதல்களின் பக்கம் தள்ளிவிடும் திமுக.,வின் வழக்கமான அரசியலாகவே சிலர் இதைப் பார்த்தாலும், திமுக.,வின் செயல்திட்டமான ஹிந்து ஒழிப்பு வேலை இது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை பெரியமேட்டில் ஏற்கெனவே ஹஜ் கமிட்டிக்கான இல்லம் இருக்கும் போது, நங்கநல்லூரில் ஹஸ் இல்லம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? யார் அப்பன் வீட்டுப் பணம் 65 கோடி? பெரும்பான்மை மக்களின் வரிப் பணத்திலா? திமுக., தனது தேர்தல் அறிக்கையில் கோயில்களுக்கு ரூ.1000 கோடி கொடுப்போம் என்று சொன்னது என்னாச்சு? – என்று சமூகத் தளங்களில் கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது.
மேலும் சில சமூகத்தளப் பதிவுகள்..
ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல..!!
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கஞ்சி காய்ச்ச 19 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 மெட்ரிக் டன் அளவுள்ள உயர்தர பச்சரிசியை தமிழக அரசே இலவசமாக வழங்கி இருக்கிறது.
ஆனால் திருவண்ணாமலைக்கு பெளர்ணமி தரிசனத்திற்கு கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், கார்த்திகை தீபத் திருநாளன்று தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கும் ஹிந்துக்கள் அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை அரசு தடை விதித்தது.
அடுத்ததாக திருச்செந்தூருக்கு சூரசம்ஹார விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.
அடுத்ததாக பழனிக்கு தைப்பூச திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.
அடுத்ததாக தற்போது அய்யா வைகுண்டரின் அவதார திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தர்மபதியில் தரிசனத்திற்கு வருகைதந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சமையல் பாத்திரங்களை அங்கிருந்து காவல்துறையினர் மூலம் எடுத்திருக்கிறது.
பண்டிகை காலங்களில் ஆலயங்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இந்துக்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் தொன்று தொட்ட மரபு. அதற்கு தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. இந்துக்கள் திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வரும் போது ஹிந்துக்கள் அன்னதானம் வழங்க தடை விதிப்பது சட்டத்திற்கு புறம்பானது. ஆலயங்களின் வருவாய் முழுவதையும் எடுத்துக் கொள்கிற இந்து சமய அறநிலையத்துறை ஏன் பண்டிகை காலங்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டியது தானே? அதை செய்யாமல் ஹிந்துக்கள் அன்னதானம் வழங்குவதை தடுப்பது எந்த வகையில் நியாயம்?
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்கிற சொல் வழக்கு தமிழகத்தில் உண்டு. காரணம் பிறரின் பசியாற்றவது உன்னதமான சேவை என்பதே நிதர்சனம்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வடலூர் வள்ளலார் பெருமான் சத்திய ஞான சபையை நிறுவி வடலூரில் அணையா அடுப்பை பற்ற வைத்து அது பல்லாண்டுகளாக பல லட்சம் பக்தர்களுக்கு அன்னமுது பாலித்து வருவதை நாம் இன்றும் பெருமையோடு பேசி வருகிறோம்.
அப்படிப்பட்ட தமிழகத்தில் அன்னதானம் வழங்க தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்? அது பாவமில்லையா?
கடவுளுக்கு ஹிந்துக்கள் அளித்த காணிக்கை பணத்தை எடுத்து கடவுளே இல்லை என்று சொன்ன தமிழக முன்னாள் முதல்வர் திமுகவின் நிறுவனர் நாஸ்திகர் திரு.அண்ணாதுரை அவர்களின் நினைவு நாளன்று ஆண்டுதோறும் ஆலயங்களில் சம்பந்தி போஜனம் என்கிற பெயரில் தெவச சாப்பாடு போடுவது எந்த வகையில் நியாயம்? அதை செய்ய சட்டம் அனுமதி அளித்ததா? ஹிந்துக்கள் அப்படி செய்யச் சொல்லி இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் கேட்டார்களா? வருடத்தில் ஒருநாள் இறை நம்பிக்கை இல்லாத ஒருவரின் இறந்த நாளன்று சம்பந்தி போஜனம் நடத்துவது சரி என்றால்?
பன்னெடுங்காலமாக பண்டிகை நாட்களில் ஆண்டவனுக்கு கைங்கர்யம் செய்யும் நோக்கில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது மட்டும் எப்படி தவறாகும்?
கேள்வி கேட்டால் உணவு பாதுகாப்புத்துறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று ஒரு புதிய அறிவிப்பை அந்த நேரத்தில் வாய்மொழி பதிலாக முன்வைக்கிறது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம்.
ஹிந்துக்கள் அன்னதானம் வழங்குவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பிரிவு தடை விதிக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தயாரா?
இந்து மத திருவிழாக்களின் போது இஸ்லாமியர்கள் ஹிந்துக்களுக்கு ரசாயன நிறமேற்றிகள் பயன்படுத்தப்பட ரோஸ்மில்க் என்கிற குளிர்பானத்தை வழங்க மட்டும் எப்படி இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அனுமதிக்கிறது?
திமுகவின் மாநாடுகளில் அக்கட்சியின் தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க அக்கட்சி எப்போதாவது உணவு பாதுகாப்புத்துறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்கிறார்களா?
ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறதே அதற்கு என்றைக்காவது தமிழக அரசு தடை விதித்திருக்கிறதா?
ஹிந்துக்கள் பண்டிகை காலங்களில் அன்னதானம் வழங்க மட்டும் திமுக அரசு தடை விதிப்பது ஏன்?
ஹிந்துக்களை விரோதித்து வீழ்ந்து போன அரசுகளின் வரிசையில், ஹிந்துக்களை அழிக்க முனைந்து அழிந்து போன அரசியல் கட்சிகளின் பட்டியலில் அடுத்ததாக திமுக இடம் பெறும்.
- சமூகத் தளப் பதிவு
சென்னை நங்கைநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் – திருப்பதியில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்!
என்னங்க சொல்றீங்க? நங்கநல்லூர்ல ஹஜ் இல்லமா?? சரி அதுக்கும் திருப்பதிக்கும் என்ன சம்பந்தம்??
மறதி ஹிந்துக்களுக்கு ஒரு கொடிய வியாதி. முதலில் வரலாற்றை சற்று சிந்தித்து பார்ப்போம். ஏன் பாரதம் சுதந்திரத்திற்கு முன்பு பிரிக்கப்பட்டது? இஸ்லாமிய தனி நாடு என்று போர்க்கொடி உயர்த்திய கொடுங்கோலன் முஹம்மத் அலி ஜின்ஹாவை இயக்கியது யார்? பாரதம் பிளவுபடவேண்டும் என்று நினைத்தவர்கள் யார்? பாரதத்தில் அமைதி இல்லாமல் என்றுமே மத கலவரங்கள் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று சதி செய்தவர்கள் யார்? இதற்க்கெல்லாம் காரணம் கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்.
அவர்களின் ஒரே நோக்கம், சனாதன ஹிந்து தர்மத்தை வேரோடு அழித்துவிட வேண்டும் என்பதுதான். இன்றளவும் அதே அவலம் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொள்கைகள் மூலமாக தொடர்கிறது.
2011ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி. உலகத்தில் புகழ்பெற்ற சனாதன நகரமான திருப்பதியில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கினார். மத்தியிலும் சோனியா காந்தி கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் ஆட்சி. இவர்கள் நோக்கம் என்ன? அதுவும் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் ஒரு கோயிலுக்கு சொந்தமானது. பாஜக, ஹிந்து அமைப்புகள் களத்தில் இறங்கின. பெரும் போராட்டம் வெடித்தது. சட்ட ரீதியாக நீதிமன்றத்திற்கு சென்றனர். தீர்ப்பு சாதகமாக வந்தது. தற்போது அந்த ஆறு மாடி கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இது ஹிந்து ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.
இதோடு நின்றார்களா அந்த மிஷனரி கைக்கூலிகள்? 2021ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த காலத்தில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில், அதுவும் திருமலை அடிவாரத்தில், மும்தாஜ் என்ற ஒரு 5 star ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதி. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின் அனுமதி ரத்துசெய்யப்பட்டது.
சரி தமிழகத்திற்கு வருவோம். ஆளும் கட்சியின் தாய் கழகம் எப்படிப்பட்டது என்று நாம் நன்கு அறிவோம். அவர்களின் தந்தை பாரத நாடு ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் என்று கூப்பாடு போட்டவர். இவர்கள் ஹிந்து மத விரோதிகள். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட மிஷனரிகளின் கைக்கூலிகள். இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.
நங்கநல்லூர் பல சிறப்புமிக்க கோயில்கள் அமைந்திருக்கும் ஒரு சனாதன தர்ம புண்ய ஸ்தலம். பெரும்பாலும் ஹிந்துக்கள் வசிக்கும் பகுதி. இங்கே எதற்கு ஹஜ் இல்லம்? மேலும் சென்னை விமான நிலையம் பரந்தூருக்கு மாற்றப்பட உள்ளது. அங்கே ஹஜ் இல்லம் அமைக்கலாமே? இவர்களின் உண்மையான நோக்கம் என்ன? சென்னையில் வேறெங்கும் இடம் இல்லையா?
இந்த கேடுகெட்ட திராவிட ஆட்சியாளர்கள், ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு தங்கும் இடம் கொடுத்து, குளிர்சாதன பேருந்தில் முன்னும் பின்னும் காவல்துறை பாதுகாப்போடு, ராஜ மரியாதையுடன் விமான நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் விமான நிலையம் அருகாமையிலேயே ஹஜ் இல்லம் தேவையா?
சென்னையில் எங்கு பார்த்தாலும், நாளில் ஒரு கடை முஸ்லிம்கள் கையில். தெருவுக்கு தெரு பிரியாணி கடைகள். ஆட்டோக்கள் பார்த்தல் அரேபிய மொழியில் பெயர்கள். பெரும்பாலான வணிகம் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. ஒரு சில பகுதிகளே மிச்சம். தற்போது அத்தகைய பகுதிகளையும் target செய்கிறார்கள், கேடுகெட்ட அரசியல் லாபத்திற்காக.
இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு ஹிந்து ஒற்றுமை. களத்தில் இறங்கி போராட தயாராக வேண்டும். ஹிந்துக்களை மதிக்கும் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். தீய சக்தி, ஹிந்து விரோத திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும்.
“பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்” – பாரதி.