
கனவுக்கோடு கலைந்தது, போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது.!
நேற்றைய விமான விபத்து நம் இந்திய தேசத்தை உலுக்கி இருக்கிறது. ஏர் இந்தியா டாட்டா குழுமத்திடம் வந்த பிறகு நடந்த முதல் பெரும் விபத்து இது. பாதுகாப்பான விமான ரகம் என பெயர் வாங்கிய அமெரிக்க போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ட்ரீம் லைனர் 787-8 ரகத்திலான இந்த விமானம் இந்தியாவில் விபத்தில் சிக்கிய முதல் விமான ரகம். 11 ஆண்டு பழையது என்கிறார்கள். ஆனால் விஷயம் அதில் இல்லை.
நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது எனப் பெருமை கொண்ட இந்த ரகம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் போதிய பராமரிப்பு நேரம் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவில் நீண்ட தூர பயணத்திற்கு பயன் படுத்தப்படும் விமானங்களை … அதிலும் குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமானங்களை உள்நாட்டு பயணித்தில் அவ்வளவாக பயன்படுத்திட மாட்டார்கள். ஆனால் இந்த விமானம் தில்லியில் இருந்து அகமதாபாத்திற்கு உள்நாட்டு பயணிகள் விமானம் ஆக பயன் படுத்தி வந்திருக்கிறார்கள். பிறகு இங்கிருந்து….. அதாவது அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்று அங்கிருந்து கோவாவிற்கு வர வேண்டும் . பின்னர் மீண்டும் இது புதுதில்லி நோக்கி உள்நாட்டு பயணிகள் விமானமாக பயணிக்கும். சமயத்தில் கோவாவில் இருந்து மங்களூர் அல்லது ஹைதராபாத் சென்று விட்டு மீண்டும் தலைநகர் புதுதில்லி நோக்கி புறப்படும்.
இதனால் இதற்கு போதிய பராமரிப்பு நேரம் ஒதுக்கப்படவில்லை என்கிறார்கள்.
விமானத் துறை வட்டாரங்களில்… ஓர் விமானத்தின் பயண நேரம் மற்றும் பயண இடைவேளைகளை முறையாக கண்காணிக்க அமைப்புக்கள் உண்டு என்கிறார்கள்.
ஒவ்வொரு விமான ரகத்திற்கும் வெவ்வேறான பராமரிப்பு கால அட்டவணை பயண நேரத்திற்கு ஏற்ப மாறுபடும் என்கிறார்கள்.
உலக அளவில் இதே ரகத்திலான போயிங் நிறுவனத்தின் ட்ரீம் லைனர் விமானங்கள் வெவ்வேறான காலப் பகுதியில் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் உண்டு. ஆனால் நேற்றைய தினம் நடந்தது போன்ற விபத்து அதன் வரலாற்றில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.
ஏனெனில்… இந்த ரகத்திலான விமானங்கள் ஒற்றை இஞ்சினால் அதன் முழு கொள்ளவுடன் தாங்கி பிடித்து பறக்கும் திறன் கொண்ட அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான நேக்ஸட் ஜெனரேஷன் என்கிற அடையாளக் குறியீடு கொண்ட GEnx இஞ்சின் ரகம் கொண்டது.
இது 2011 ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரையில் அதாவது மே மாத நிலவரப்படி சுமார் 1189 விமானங்கள் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து இருக்கிறார்கள். இவை போக புகழ் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இஞ்சின் ரகமும் இந்த ட்ரீம் லைனரில் பயன் படுத்தப்படும்.
ஆனால் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இஞ்சின்களை கொண்ட விமானங்கள் இதுவரையில் விபத்தில் சிக்கிய தே இல்லை….. நேற்றைய சம்பவம் தான் முதல் தடவை என்பது தான் நெருடலாக மாறி நிற்கிறது.
விமானத்தை இயக்கிய விமான பைலட்டுகள் அனுபவ முதிர்ச்சி கொண்டவர்கள். இருவரில் ஒருவருக்கு 8000 மணி நேரத்திற்கு மேலாக பறத்தல் அனுபவமும் மற்றொருவருக்கு 1800 மணிநேர பறத்தல் அனுபவமும் உள்ளது.
வெளிநாடுகளில் இந்த ரக விமானங்களை இயக்க குறைந்த பட்சம் 300 மணி நேர பறத்தல் அனுபவமே போதுமானது என இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறார்கள் காரணம் அத்தனை தூரம் விமானம் நவீனமயமானது. இதன் கணினி அமைப்புகள் சுமார் பன்னிரண்டு நிமிஷத்தில் கிட்டத்தட்ட 20,000 அலாக்கிரதங்களுடன் சோதனை செய்ய வல்லது.சின்ன தவறுகளையும் காட்டிக் கொடுக்க வல்லது.
இரட்டை இஞ்சின் சக்தி கொண்டு இதில் பறவை மோதினாலும் தொடர்ந்து பறக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில் இது அளவில் பெரிய விமான இஞ்சின் கொண்டது.
நேற்றைய தினம் பறந்த விமானத்தில் பறவை மோதல் நடக்கவில்லை.
விபத்து டேக் ஆஃப் நடந்த மூன்று நிமிடத்திற்குள் நடந்திருக்கிறது, தவிர…. இது அருகில் உள்ள நான்கு மாடி கட்டிடங்கள் மேல் பொதிந்துள்ளது. இதனால் மட்டுமே எமெர்ஜென்சி கதவுக்கு அருகில் இருந்த 11A இருக்கை பயணி வெளியே குதித்து தப்பித்து இருக்கிறார். இவர் அந்த மாடியில் குதித்து தப்பித்து படி வழியே இறங்கி நடந்து வந்து ஆம்புலன்ஸ் ஏறியது தான் ஹை லைட்.
என்ன நடந்தது இந்நிகழ்வில்…….?!?!
எதேச்சையாக மாடியில் இருந்து.. அதாவது அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு அருகில் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஒருவரது செல்போனில் விமான பறத்தலை படமாக்கப்பட்டது வைரல் ஆனது. இது அந்த விமான விபத்து வரை நீள்கிறது. அதில் தெளிவாக தெரிகிறது விமான இஞ்சின் முறையாக இயங்கி இருப்பது தொழில்நுட்பவியலாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆக இஞ்சினில் கோளாறு இல்லை.பறவை மோதல் நடக்கவில்லை 800 அடிக்கு மேல் பறக்கவில்லை.டேக் ஆஃப் ஆன மூன்று நிமிடங்களுக்குள் விபத்து நடந்திருக்கிறது. மே டே அறிவிப்பு வெளியிட்ட 28 விநாடிகளில் விபத்து நடந்திருக்கிறது.கட்டிடதத்தின் மேல் விமான பொதிந்த பத்து விநாடிகளுக்கு பிறகு தீப்பற்றி எரிந்திருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் தான் அந்த பயணி வெளியே தப்பிக்க முடிந்திருக்கிறது.
இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது….. விமானம் ஸ்டால் ஆனதற்கு… அதாவது பறக்காமல்… மேல் எழும்பாமல் விழ்ந்தற்கு அதன் ப்ளாப் அமைப்பே முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…
அதாவது இந்த அமைப்பு விமான இரக்கை பகுதியில் மேல் கீழாக அசையும் பண்புகளை கொண்ட ஒன்று. ஓடுபாதையில் ஓடும் வரை இந்த ப்ளாப் கீழ் நோக்கி இருக்கும்…இது விமானம் மேலெழும் உந்து விசையை கூடிக் கொடுக்கும். ஓடுபாதை விட்டு மேலேறியவுடன் மேல் நோக்கி திரும்பி விமானம் மேலும் மேல் நோக்கி பறக்க உதவும் அமைப்பு இது விமான கியரோடு பொருந்தி இருக்கும் தொழில்நுட்ப பண்புகளை ஒருங்கே அமையப்பெற்றதாகும்.
நேற்றைய தினம் இந்த அமைப்பு மேல் நோக்கி பறந்த சமயத்தில் போதிய உந்து விசை கிடைக்காமலும் மேல் நோக்கி திரும்பி நிலையில் லாக் ஆகி இருக்கிறது.
இது தான்…. இந்த நிலை தான்…. விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.
ஒரு வேளை இந்த மேலேயே லாக் ஆகாது இருந்திருந்தால்….. விமானியால் இதை கையாண்டு சரிசெய்து இருக்க முடியும்….. அந்த ப்ளாப் ஐ மீண்டும் கீழ் நோக்கி வைத்து உரிய உந்து விசை கொடுத்து மேலேற்றி இருக்க முடியும்…. பைலட்டுகளுக்கு இதில் உரிய பயிற்சி கட்டாயம் இருக்கும்.
அப்படி இருக்க இந்த ட்ரீம் லைனர் விமானத்தின் தானியங்கி முறைமைகள் இதற்கு அனுமதிப்பதில்லை.
நேற்றைய சம்பவத்திற்கு இதுவே முழுமுதற் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
இதற்கு ஆதாரமாக…… விமானம் கட்டிடத்தின் மேல் பொதிந்துள்ளதால் இந்த ப்ளாப் மேல் நோக்கிய வண்ணமே இருப்பது மிக நன்றாகவே காணக் கூடியதாக இருக்கிறது. உடனடியாகவே இதன் கருப்பு பெட்டி கைப்பற்றி ஆய்வுகளுக்காக கொண்டு சென்று இருக்கிறார்கள். போயிங் நிறுவனத்தின் பொறியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார்கள்.அவர்களும் இந்த தகவல்களை இன்று அதிகாலை ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள்.
விபத்தாக இருப்பதற்கே வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதேசமயம் இது தொழில்நுட்ப பண்புகளால் தான் நடந்திருக்க முடியும்.அதே சமயம் இது நுட்பமான நுணுக்கமான தவறாக அவதானிக்கப்படுகிறது.
ஆனால் இங்கு மற்றோர் விஷயமும் அவதானிக்க வேண்டி இருக்கிறது.
இதற்கு அடுத்த அதாவது இந்த ட்ரீம் லைனர் விமான ரகத்தை தொடர்ந்து இதே போயிங் நிறுவனத்தின் புத்தம் புதிய 737 மாக்ஸ் ரகத்திலான விமானங்கள் வரிசையாக விபத்தில் சிக்கிய சம்பவத்தில் …….. இந்த விபத்துக்கள் அனைத்தும் பைலட்டுகளின் கட்டுப்பாட்டிற்கு அடங்காத தானியங்கி முறையில் டேக் ஆஃப் செய்யும் போது நடந்த விபத்துக்களாகவே அமைந்தது. தானியங்கி தன்மையே காரணமாக கண்டறியப்பட்டது. இதே நோஸ் டெயில் கியர் லாண்டிங் பிரச்சினை தான்.
இந்த ஒரு பிரச்சினை போயிங் நிறுவனத்தையே திருப்பி போட்டது. ஒட்டுமொத்த போயிங் நிறுவனத்தையே இழுத்து மூட வேண்டிய நிலைமைக்கு போனது. ஒட்டுமொத்தமாக போயிங் 737மாக்ஸ் விமானங்களை தரை இறக்க அமெரிக்கா FAA தயவு தாட்சண்யம் பார்க்காமல் தடை விதித்தது. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்டரேஷன் என்பதின் விரிவாக்க சுருக்கம் தான் FAA.
அப்போது டொனால்ட் ட்ரம்ப் தான் அமெரிக்க அதிபர். இப்போதும் அவரே அமெரிக்க அதிபர். நிறுவனமும் அதே போயிங். பிரச்சினை கிட்டத்தட்ட அதே போன்றதொரு சமாச்சாரம். விவகாரம் முற்றி ட்ரீம் லைனர் மாட்டியது என்றால் சர்வ நிச்சயமாக போயிங் மூடு விழா கண்டுவிடும். தற்சமயம் அமெரிக்க இந்திய அரசியல் உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. இங்கு மற்றோர் விஷயமும் கவனிக்க வேண்டும். இதே போயிங், டாட்டா குழுமமும் இணைந்து பல்வேறு விமான கட்டமைப்புகளில் பெரும் முதலீடுகள் செய்து வர்த்தக பங்களிப்பை அது கொண்டு இருக்கிறது.
தற்போதைய நிலையில் இது டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அட்டகாசமான துருப்பு சீட்டு.
அதன் பொருட்டே போயிங் நிறுவனம் முந்தி வந்து நிவாரண தொகையை அறிவித்திருக்கிறார்கள்.அது கை கொடுக்குமா என்பது போகப் போக தான் தெரியும்.
நேற்றைய விமான விபத்து மிகப் பெரிய வர்த்தக லாபியை உண்டு பண்ணி விட்டது.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொண்ட குஜராத் மாநில அரசு அதன் முன்னாள் முதல்வரை இந்த விபத்தில் பலி கொடுத்து இருப்பதால் துக்கம் அனுஷ்டித்து வருகிறது. காலவரை இன்றி விமான நிலையத்தை மூடி வைத்து இருக்கிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை ….. பயணிகள் மட்டுமன்றி விமானம் விழுந்த கட்டிடத்தில் மருத்துவம் கல்லூரி மாணவர்களும் இந்த விபத்தில் சிக்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் மீட்க பசுமை சாலையை விபத்து நடந்த நாற்பது நிமிடத்தில் ஏற்படுத்தி தந்திருக்கிறது அரசு நிர்வாகம்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூன்று தொகுப்பு ஆட்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.
RSS சம்பவம் நடந்த ஒன்றரை மணி நேரத்தில் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.உயிர் பலி 300 ஐ தாண்டிடக்கூடாது என்பதே அனைவரது பிராத்தனை. அதிகாலை நேரத்தில் அனைத்தும் முடிந்ததாக சொல்கிறார்கள்.
இரங்கலுடன்…… காலம் பாராது களத்தில் உழன்ற தன்னார்வலர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.வருத்தங்களுடன்…..
– ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்





