
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பேராசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வூதியர்கள் பதிவாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்தும்,பதவி உயர்வு வழங்கப்படாததை கண்டித்தும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் ஒய்வூதியர்கள் சங்கத்தினர் இணைந்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு பதவி உயர்வு, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் மற்றும் பென்சனர் சங்கம் மதுரை பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி அலுவலர் நலச் சங்கம் மற்றும் அலுவலர் சங்கம் இணைந்து பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது
அதனைத் தொடர்ந்து , பல கட்டபோராட்டம் நடத்திய பல்கலைக்கழக போசிரியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம் போராட்டம் நடத்தினர்.
பல்கலை நிர்வாகம் ஊதியத்தை வழங்க தொடர்ந்து கால தாமதப்படுத்தி வருவதாகவும் அதனால் இன்று பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து போராட்டக் குழுவின் இடம் பேச்சுவார்த்தை நடத்திய பதிவாளர் ராமகிருஷ்ணன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ஆனால் ,அதற்கான உத்திரவாதம் வழக்க வேண்டும் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர் சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், பதவி நிலை உயர்வு விவகாரத்தில் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த பதிவாளர், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் இதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
மேலும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை பரிசீலிக்க வேண்டிய முக்கிய அதிகாரியை சந்திக்க வில்லை என்பதும் அதன் விளைவாக, எந்த ஒரு நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.
ஊதியம் பெற அரசால் விதிக்கப்பட்டுள்ள பல நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தாலும், அந்த நிபந்தனைகள் என்னவென்பதற்கான தெளிவும் வழங்கப்படவில்லை.
இதனால், பேரரசிரியர்கள், ஒய்வூதியர்கள ஊதியம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் பதவி உயர்வும் ஊதியமும் கிடைக்கும் வரை நாங்கள் இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.





