ஒரு படம் ஒரு மொழியில் பெரிய வரவேற்பை பெற்றால் அதை வாங்கி மற்றொரு மொழியில் ரீமேக் செய்து ஹீட் வாங்கி பணம் பார்ப்பார்கள். மார்கெட் இல்லாத நடிகர்கள் அந்த ஹீட் கதையின் மூலம் முன்னோக்கி வருவார்கள் டப் படத்தில் நடித்தே ஒரு நடிகர் முன்னணி நட்சத்திரமான கதைகள் ஏராளம்.
தற்பொழுது நடிகர் சஞ்சய் தத் இந்தியில் ரீமேக் செய்யும் படம் பிராஸ்தானம்.
அவரது மனைவியே தயாரிக்கும் இந்த படத்தில் அரசியல் அதிரடிகள் நிறைந்துள்ளது. இப்படத்தின் டைட்டில் ட்ராக் நேற்று வெளியானது.
இந்தியில் பூமி படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்த நடிகர் சஞ்சய் தத் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார். அதன் ஒரு பகுதியாக இப்போது கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி அபார வெற்றி பெற்ற பிராஸ்தானம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யபோகிறார்.
சஞ்சய் தத் தனது சொந்த தயாரிப்பான சஞ்சய்.எஸ்.தத் புரொடக்சன்ஸ் சார்பில் மன்யதா தத் தயாரிப்பில் நடித்து வெளியாக இருக்கும் அரசியல் சார்ந்த அதிரடி ஹிந்தி திரைப்படம் பிராஸ்தானம்.
இப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அதிரடி ட்ரைலர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இப்படத்தில் மனிஷா கொய்ராலா, ஜாக்கி ஷெராஃப், சுன்கி பாண்டே , அலி பாசல், அமைரா தஸ்தூர், சத்தியஜீத் துபே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரைலர் வெளியான அடுத்த நாளான இன்றே படத்தின் டைட்டில் ட்ராக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் கடந்து செல்லும் முழு பயணத்தையும் சித்தரிக்குமாறு அமைந்துள்ளது.இப்பாடலின் வரிகளை எழுதி இசையமைத்திருக்கிறார். தேவ் நேகியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலானது அரசியல் சூழ்நிலைக்கு தகுந்த குரலாக அமைந்திருக்கிறது.
பாடலின் வரிகள் ட்ரைலருக்கு மிகவும் பொருத்தமாகவும் கம்பீரமாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். இடத்தின் ட்ரைலரும் டைட்டில் ட்ராக்கும் அடுத்தடுத்து வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை தன் இன்ஸடாகிராமில் பதிவிட்டுள்ள சஞ்சய் தத் “பாரம்பரியத்தை சம்பாதிப்பதற்கான போர் தொடங்குகிறது.”