அந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்!

meera 1

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண் போட்டியாளர்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை வீடியோவாக விவரித்திருக்கிறார்.

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். இதுவரை சாக்ஷி, அபிராமி குறித்து பேசி வந்த மீரா தற்போது ஆண் போட்டியாளர்கள் குறித்து பேசியுள்ளார்.

meera mithun

இதுதொடர்பாக மீரா மிதுன் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
ஹோட்டலில் உட்காந்தப்படியும் நடந்தபடியும் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறார் மீரா மிதுன்.
மீரா மிதுன் பேசியதாவது, பிக்பாஸ் வீட்டில் வாரா வாரம் எல்லோரும் என்னை நாமினேட் செய்தார்கள். நான் வெளியே ஆள் வைத்து புரமோஷன் செய்ததாக கூறுகிறார்கள்.

meera 2

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த 5 வாரமும் என்னுடைய டிவிட்டரும் இன்ஸ்டாகிராமும் எந்த புரமோஷன்ஸும் இல்லாம சும்மாதான் இருந்தது. மத்தவங்க சோஷியல் மீடியா பேஜ் எல்லாம் நல்ல புரமோஷன்ஸ் இருந்தது.

பிக்பாஸ் வீட்ல இருந்த வீ ஆர் த பாய்ஸ்னு சொல்ற நாலு பேருமே சரியான கோழைங்க. வீட்டுக்குள்ளயே என்னை அப்படி பார்ப்பாங்க.. என்கூட பேசனும்னு நினைப்பாங்க.. ஆனா மத்த பொண்ணுங்க யாருக்கும் தெரியாம பயந்து பயந்து பேசுவாங்க.. அதையும் தாண்டி வாரா வாரம் எனக்கிருந்த மக்களோட சப்போர்ட்ட பார்த்து என்கூட வந்து ஒட்டிப்பாங்க.

ஒரு நாள் என் கூட நல்லா பேசுவாங்க, பழகுவாங்க, அடுத்தநாள் அப்படியே மாறிடுவாங்க.. ஏன்னா என்கூட பழகினா மத்த பெண்களோட ஓட்டு போயிடும்ல அதுக்குகாகதான். பிக்பாஸ் வீட்டோட பெரிய பிரச்சனையே என்ன தெரியுமாங்க.. எல்லா பசங்களும் என்மேல இன்ட்ரஸ்ட்டா இருந்தாங்க. எல்லா பாய்சும் என்னால கவரப்பட்டாங்க.. அவங்க என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க.

அதை அங்கிருந்த மற்ற பெண்களால ஜீரணிக்க முடியல. ஏன்னா பசங்க என் கூட இருக்கறத சந்தோஷமா நினைச்சாங்க. ஏன்னா நான் ஃபன்னா இருந்தேன், ஜாலியா இருந்தேன், நான் பாஸிட்டிவா இருந்தேன். எல்லா பாய்சும் என்னை சுத்திதான் இருப்பாங்க. அதை எந்த பொண்ணாலயும் பார்க்கவே முடியல.

பாய்சும் வேற வழியே இல்லாம மத்தவங்களுக்காக பயந்து அந்த பொண்ணுங்க கூட சேர்ந்துக்கிட்டு என்னை ஒதுக்கி வச்சாங்க. என்னால மத்த பொண்ணுங்கள மாதிரி பசங்க மேல போய் போய் விழுந்து ஃபிளிர்ட் பண்ணிக்கிட்டு பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க முடியாது. எனக்குன்னு சுயமரியாதை இருக்கு. நான் என்னை மாதிரிதான் இருக்கேன், என்கிறார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :