
நிவேதா பெத்துராஜ் “ஒரு நாள் கூத்து “திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பார்ட்டி மற்றும் திமிரு புடிச்சவன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
டிக் டிக் டிக் திரைப்படத்தில் அவரது சிறப்பான நடிப்பு அவரை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளது. அந்த படத்தில் டிக் டிக் டிக் பாடலில் நீச்சல் உடையில் வந்து இளைஞர்களின் நெஞ்சை அள்ளினார்.

சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலின் போது அவர் சில சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அவருக்கு கவர்ச்சி கன்னி மார்லின் மன்றோவின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அவருக்கு திரையுலகில் இருப்பவர்களில் யார் மீது ஈர்ப்பு அதிகம் என்று கேட்ட போது அவர் சற்றும் யோசிக்கமால் இளைய தளபதி விஜய் என்று டக்குனு பதிலளித்தார்.

நிவேதா பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்றாலும் அவர் படித்தது வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். தமிழ் சினிமாவில் தமிழ் கதாநாயகி ஆக வலம் வருகிறார்.



