ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

Published:

legend saravana productionnumber1 - 2026

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை  டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.

சரவணா ஸ்டோர்ஸின் துணிக்கடை விளம்பரங்களில் தன்னம்பிக்கை மனிதனாக தானே நடிகைகளோடு ஜோடி போட்டு ஆடினார் லெஜண்ட் சரவணன். இதையடுத்து அவருக்கு சினிமா ஆசை கிளம்ப புதிதாக படம் தயாரிக்க களத்தில் இறங்கி விட்டார். நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் வழங்கும், அறிமுக நாயகன் Legend சரவணன் தயாரித்து, நடிக்கும்…“புரொக்ஷன் நம்பர்-1” என அறிவிப்பும் வெளியாயிற்று!

legend saravana productionnumber1 1 - 2026

டிச.1 அன்று காலை AVM சரவணன் குத்துவிளக்கு ஏற்ற, S.P. முத்துராமன் க்ளாப் அடிக்க, AVM ஸ்டூடிடயாவில் பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே தொடங்கியது. இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி எழுதி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், Legend சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கீத்திகா திவாரி நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜகுமார், நாசர், தம்பிராமையா, காளிவெங்கட், மயில்சாமி, லதா, கோவைசரளா, தேவிமகேஷ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமான படமாக உருவாகிறது.

legend saravana productionnumber1 2 - 2026

இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, S.S.மூர்த்தி அரங்கம் அமைக்க ரூபன் எடிட்டிங் பொறுப்லப கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, முதல் பா டலை வைரமுத்து எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, ஹிமாலயாஸ் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட உள்ளது.

என்னதான் புதுமுக நாயகி என்றாலும், சரவணனுக்கு கொஞ்சம் உயரமாகவே அமைந்துவிட்டாராம்! இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு பலரும் உயர சோகத்தைக் கிளப்பி விட்டிருக்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img