கன்னியாகுமரியில் நயன்தாரா, காதலனுடன் சாமி தரிசனம்!

Published:

mukkuthi amman - 2026

ரேடியோ ஜாக்கியா இருந்து, எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாகி, இப்போது இயக்குனராகி இருக்கிறார் பாலாஜி. இவர் இயக்கும் மூக்குத்தி அம்மன் என்னும் பக்தி படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார் நயன்தாரா.

இதற்காக நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் நாள் முழுவதும் விரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் வெளிநாடுகளில் பார்ட்டி, மாமிசம் என கொண்டாட்டத்தில் இருந்த வீடியோ வெளியானதை பார்த்த ரசிகர்கள், இது தான் உங்கள் விரதமா என கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே கன்னியாகுமரியில் தொடங்கியது.
இன்று(டிச.,10) முதல் அதன் படப்பிடிப்பில் இணைகிறார் நயன்தாரா.

nayan - 2026

இதற்காக நேற்று கன்னியாகுமரி வந்த அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு விரதம் தொடங்கினார். நயன்தாராவின் திடீர் வருகையால் கோவிலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

பக்தர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்தனர். இதனால் நயன்தாரா கோவிலை விட்டு வெளியில் வரமுடியாமல் தவித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி நயன்தாராவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Related articles

Recent articles

spot_img