எல்லாரும் ஏற்கனவே பார்த்தாச்சே அப்பறம் இப்ப எதுக்கு?நிகழ்ச்சியில் பாதியில் எழுந்து போகும் நடிகை!

Published:

shalu 3 - 2026

நடிகை ஷாலு ஷம்மு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து கோபத்தில் பாதியிலேயே கிளம்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தார். அதே படத்தில் நடிகர் சூரியுடனும் ஜோடி சேர்ந்தார்.

shalu 2 - 2026

அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிகர் சதிஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல் அஞ்சலிக்கு தோழியாக நடித்துள்ளார்.

shallu 1 - 2026

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார். பிகினி, உள்ளாடைகள் என அரைகுறை ஆடையில் அவர் காட்டும் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

shalu 4 - 2026

அண்மையில் முழு நிர்வாணமாக வெறும் ரோஜா பூக்களை கொண்டு அந்தரங்க பாகங்களை மறைத்து படு கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டிருந்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கேங்ஸ்டர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ஷாலு ஷம்மு.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

shalu - 2026

அதில் ஒரு செக்மென்ட்டில் விருந்தினரின் போட்டோக்கள் அங்குள்ள ஸ்கீரினில் ஒளிபரப்பப்படும். அதனை பார்த்து போட்டியாளர்கள் அப்படியே போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில் ஷாலு ஷம்மு பங்கேற்ற நிகழ்ச்சியிலும் அவரது போட்டோக்கள் பயன்படுத்தப்பட்டன. முதலில் டீசன்ட்டான போட்டோக்கள் பயன்படுத்தப்பட்டது. அதனை ரசித்தார் ஷாலு ஷம்மு.

shalu sham - 2026

பின்னர் அவர் நிர்வாண கோலத்தில் இருந்த போட்டோக்கள் அங்குள்ள ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த ஷாலு ஷம்மு கடுப்பானார். இந்த போட்டோவை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? இது தேவையில்லாதது, ஒரு நடிகையை கூட்டி வந்து இப்படியா அசிங்கப்படுத்துவது என விளாசியப்படி மேடையை விட்டு இறங்கி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

shalu shamu - 2026

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி குழுவினர் ஷாலு ஷம்முவை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்த புரமோ வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதில், அதன்பிறகு ஷாலு ஷம்மு சமாதானமாகி மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றாரா அல்லது பாதியிலேயே கோபத்தில் கிளம்பி போயிவிட்டாரா என்பது தெரியவரும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img