விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

சினி நியூஸ் சினிமா
vijay

தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் விஜய்யும் ஒருவர். அவரை வைத்து படம் எடுத்தால் வசூல் உறுதி என்ற அளவுக்கு தயாரிப்பாளர்கள் ‘நம்பி’ படங்களை தயாரிக்கின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் விஜய் படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்ததாக பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சார்லி சாப்ளின், சண்ட போன்ற படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் விநியோகஸ்தர் தொழிலும் பார்த்து வந்தார். இவர் விஜய் நடித்த காவலன் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டாராம். ஆனால் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளார்.

காவலன் படத்தை விநியோகம் செய்ததில் அவருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன்பிறகு விநியோகஸ்தர் தொழிலையே விட்டு விட்டதாக யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் படங்களை வாங்கி விநியோகம் செய்பவர்களுக்கு அரசியல் பிரச்சனை அதிகமாகவே இருந்தது தற்போதும் இருந்து வந்தாலும் பெரிய நிறுவனங்களாக இருக்கும் பட்சத்தில் சமாளித்துக் கொள்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.