காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடினாராம்.
சிம்பு, பிரபுதேவா என காதல் வானில் இருந்த நயந்தாரா, கருத்து வேறுபாடுகளால் இருவரையும் விட்டுப் பிரிந்தார். இந்நிலையில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.
சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இவருடைய பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு அளிக்க நயன்தாரா விரும்பினார். அதன்படி இரு தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு பறந்தார் நயந்தாரா.
நியூயார்க்கில் நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்னேஷ் சிவன். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் படம் இணையதளத்தில் வைரலாகப் பரவியது. அமெரிக்காவில் மேலும் இரு தினங்கள் தங்கிவிட்டு சென்னை திரும்பலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனராம்.
இதனிடையே, நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், அவர்களுக்குள் ரகசிய திருமணம் முடிந்து, அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.



