சக்க போடு போடு ராஜா என்ற படத்துக்கு இசை அமைத்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

இந்தப் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனுஷ் கலந்து கொண்டு இசைத் தகடை வெளியிடுகிறார். இதில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. இதனை நடிகர் சந்தானம் இந்த இசை வெளியீட்டு விழா குறித்துக் கூறியபோது, நேற்று கூறியுள்ளார்.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்த சிம்பு மீது அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். தனக்கு அவரால் ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். மேலும், அவருடன் நடிக்க நடிகைகள் தயங்கினர் என்றும் அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending