டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள திரைப்படம் டான்.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி டானியல் அறிமுக இயக்குனராகி சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். டாக்டர் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் மீது, அதைவிட அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம், இளம் இயக்குனர்களின் உணர்வை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல் பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை சிறப்பு. பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், சிவகார்த்திகேயன் மகனாக பிறக்கிறார். சமுத்திரகனியின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்ததால், சிவகார்த்திகேயன் மீது அதிக ஈடுபாடு இல்லாமல் கண்டிப்பாக இருந்து வருகிறார். வாழ்க்கையில் சாதிக்க மாட்டான் என்று நினைக்கும் சமுத்திரகனியிடம், சாதித்து காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதன்பின் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் தடுக்கிறார். 
இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் தடைகளை தாண்டி, சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதையாக இருக்கிறது.

நாயகன் சிவகார்த்திகேயன் நடனம், காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார்.  தற்போது படிக்கும் மாணவர்களின் பிரதிபலிப்பாக ஜொலித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இறுதியில் கண்கலங்க வைத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இருவரின் கெமிஸ்ட்ரி டாக்டரை தொடர்ந்து டானிலும் சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
நடிகை பிரியங்கா மோகன் அழகிய நடிப்பினால் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளார். காதல் மட்டுமல்லாமல், எமோஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். காமெடிக்காக மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனுக்கு உறுதுணையாக வந்து நிற்கிறது சூரியின் கதாபாத்திரம்.

படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. பல இடங்களில் சாதாரணமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்டிப்பான அப்பாவாக மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரக்கனி. ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

images 54 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories