December 6, 2025, 3:54 PM
29.4 C
Chennai

குட்பை படம் எனக்கு நல்ல மாற்றம் ஏற்படுத்தியுள்ளது-நடிகை ராஷ்மிகா..

877968 awarg - 2025

நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை, தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. நடிகர் அல்லு அர்ஜூனுடன் நாயகியாக இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்தது. அவருக்கு ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் ஜோடி சேர்ந்த அவர், வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருகிறார். இதுதவிர, இந்தி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

images 2022 09 17T201405.181 - 2025
images 2022 09 17T201444.812 - 2025

பிரபல பட தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள குட்பை என்ற இந்தி திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். குடும்பத்தின் முக்கியத்துவம், ஒவ்வொரு சூழலிலும் வாழ்க்கையை கொண்டாடுவது மற்றும் அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ உதவ கூடிய சுய உண்மையை அறிதல் (தன்னிலை, தன்மதிப்பு போன்றவற்றை அறிதல்) ஆகியவை படத்தில் அழகாக வர்ணிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் வாழ்வின் ஏற்ற, இறக்கங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்தும்.

விகாஸ் பால் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா உள்ளிட்டோருடன் பவைல் குலாதி, எல்லி ஆவ்ரம், சுனில் குரோவர் மற்றும் சாஹில் மேத்தா ஆகியோரும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்ததில் ஒரு பெரிய உருமாற்றம் பெற்றுள்ளேன் என கூறும் ராஷ்மிகா, நான் ஒரு பஞ்சு போன்றவள். அதனால், என்னுடன் நடிக்கும் நடிகர்களின் திறமைகளை உறிஞ்சி கொள்வேன் என கூறியுள்ளார். குட்பை படத்திற்கு முன்பும், குட்பை படத்திற்கு பின்பும் ராஷ்மிகா முற்றிலும் வேறுபட்டவள். அதில் பச்சன் சார் ஒரு பெரும் பங்காற்றி உள்ளார் என அவர் கூறியுள்ளார். நடிகர் அமிதாப்புடனான முதல் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா, முதல் நாளில் பச்சன் சாரை நான் சந்தித்தபோது, அவரது தனித்துவ பண்பை கண்டு மிரண்டு போனேன். அவர் மிக கனிவானவர். படப்பிடிப்பு தருணத்திலேயே, ஒரு நடிகராக அவரை பற்றி என்னால் நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது என கூறியுள்ளார். அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்களேன், என கேட்டதற்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதிலில், பச்சன் சாருடன் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் ஆச்சரியம் நிறைந்தது. எனது முதல் இந்தி திரைப்படத்திலேயே பச்சன் சாருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற எல்லோரையும் விட அவர் சிறந்ததொரு ஆசானாக இருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories