தமிழ், இந்தி, மளையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில்தான் நடித்த காலங்களில் தன்கென தனியிடத்தை தக்கவைத்துக் கொண்ட ஸ்ரீதேவி காலமானார். துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர், மாரடைப்பால் மரணமடைந்தார். வழக்கமான வார்த்தையில் சொல்வதானால் அவரது மறைவு திரையுலகிற்கு மாபெரும் இழப்பு. ஆனால் திரையுலம் ஒரு உச்ச நட்சத்திரத்தை இழந்திருக்கிறது.
1963 ஆகஸ்ட் 13ல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்தவர் ஸ்ரீதேவி. முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது நான்காவது வயதில் கந்தன் கருணையில் அறிமுகமானார். பாபு, துணைவன், நம்நாடு, வசந்த மாளிகை, கனிமுத்து பாப்பா, பாரதவிலாஸ், திருமாங்கல்யம் என்று பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்று திஜை£ம்பவான்கள் படத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.
நடிகை ஸ்ரீதேவி காலமானார்
Popular Categories



