virat anushka1 - 2026

பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, தனது கணவருடன் மாதம் ரூ.15 லட்சம் வாடகை உள்ள வீட்டிற்கு குடியேறவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருணம் செய்த நடிகை அனுஷ்கா சர்மா, மும்பையின் மிக காஸ்ட்லி பகுதியான வோர்லி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபோகவுள்ளார். 40வது மாடியில் அமைந்துள்ள ஆடம்பர பிளாட்டில் இந்த காதல் தம்பதியினர் தங்கவுள்ளனர்.

2675 சதுர அடி கொண்ட இந்த வீட்டின் வாடகை மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் என்பதும் முன்பணம் ரூ.1.50 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த வீட்டில் விராத்-அனுஷ்கா தம்பதியினர் ஒருசில மாதங்கள் மட்டுமே தங்கவுள்ளனர். இதே வோர்லி பகுதியில் விராத் கோஹ்லி ரூ.34 மதிப்பில் ஒரு பிளாட்டை வாங்கி அதனை அழகுப்படுத்தி வருகிறார். இந்த பணிகள் முடிந்தவுடன் இவர்கள் தங்களுடைய சொந்த வீட்டிற்கு செல்லவுள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending