காவிரி போராட்டக்காரர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது சென்னை கிரிக்கெட் ரசிகர்களை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சித்தார்த் கூறியபோது, ‘ஐபிஎல் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. போராட்டக்காரர்களுக்கு வாழ்த்துக்கள். அப்படியே காவிரி மேலாண்மை வாரியம் கிடைக்கும் வரை டாஸ்மாக்கை மூடலாம். அதேபோல் பிரபல அரசியல்வாதிகளின் டிவி சேனல்களை மூடலாம். மேலும் போராட்டத்தின்போது கட்சி கொடியை தவிர்த்து ஒற்றுமையாக ஒரே கொடியின் கீழ் போராடலாம் என்று கூறியுள்ளார்
https://twitter.com/Actor_Siddharth/status/984060006461931520



